எங்களைப்பற்றி தமிழில் தெரிந்து கொள்ள

தினமலரில் "ஏற்றுமதி செய்யலாம் வாங்க" என்ற தொடரை 40 வாரங்களுக்கு மேலாகவும், 150 வாரங்களுக்கு மேலாக "ஏற்றுமதி பாடம்" என்ற தலைப்பில் கேள்வி-பதில்களும், தமிழ் தொழில் உலகம் மாதப் பத்திரிக்கையில் ஏற்றுமதி கேள்வி-பதில்கள் எழுதியும் மற்றும் மும்பை-மராத்திய முரசு நாளிதழில் "ஏற்றுமதி" பற்றி தொடர் எழுதியும் வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரு.சேதுராமன் சாத்தப்பன் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு எங்களின் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இவர் ஏற்றுமதி ஆவணங்களுக்காக உலகஅளவில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் முதல் முறையாக எளிய தமிழில் "ஏற்றுமதி செய்வது எப்படி" என்ற பயிற்சியை மிக விரிவாக தபால் மூலம் நடத்தி வருகிறோம். தமிழ் மட்டும் தெரிந்தவர்களும் கூட ஏற்றுமதி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை உண்டாக்கும் விதமாக தொடங்கப்பட்டது எங்கள் நிறுவனம். இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். அவர்களால் பாராட்டி எழுதப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கவுரையில் கொடுத்துள்ளோம். திரு.சேதுராமன் சாத்தப்பன் அவர்கள், ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கான ஆவணங்களை பிழையில்லாமல் தயாரிப்பது எப்படி என்றும் அதற்கான விதிகளுக்கான (UCPDC ) நடத்தப்படும் பல கருத்தரங்குகளில் / பயிற்சி முகாம்களில் (இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும்) சிறப்பு பயிற்சி அளிப்பவர். தாங்கள் சொந்தமாக ஏற்றுமதி/இறக்குமதி செய்ய நினைத்தாலோ அல்லது ஏற்றுமதி/இறக்குமதி ஸ்தாபனங்களில் பணிபுரிய நினைத்தாலோ அதற்க்கு எங்கள் பயிற்சி தங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

பயிற்சி புத்தகங்கள்:

ஏற்றுமதி பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்காக அடிப்படையிலிருந்து ஆவணங்கள் (DOCUMENTS ) தயாரிப்பவரை மிக விரிவாக 600 பக்கங்களுக்கு மேலாக பயிற்சி புத்தகங்கள் தயாரிக்கபட்டுள்ளன.

பயிற்சி தேர்வுகள்:

பயிற்சியின் போது பயறிசி பெறுபவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டார்கள் என அறிந்து கொள்ளும் பொருட்டு எளிய வினாத்தாள் (Response Sheet ) புத்தகத்தில் இணைக்கபட்டிருக்கும். நீங்கள் எழுதி அனுப்பியதும் பின்னர் அதை நாங்கள் திருப்பி மதிப்பெண் இட்டு அனுப்பி வைப்போம்.

பயிற்சி கட்டணம்:

இந்த ஏற்றுமதி பயிற்சிக்கான கட்டணம் Rs .3000 ஆகும். இரு தவணையாக செலுத்தினால் முதல் தவணை Rs .1500/-மற்றும் இரண்டாவது தவணை Rs 1700 ஆகும். அதை டி.டி மூலம் அனுப்பவும். செக்/மணியார்டர் ஏற்க்கப்பட மட்டது. வங்கி டி.டி "The Institute for Learning Exports” என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்படவேண்டும்.

பயிற்சி காலம்:

3 மாதங்கள்

இறுதித் தேர்வு:

பயிற்சி முடிந்தவுடன் இறுதித் தேர்வு தபால் வாயிலாக நடத்தப்படும். பின்னர் "சான்றிதழ்" வழங்கப்படும். நீங்கள் இந்த முழுப் பயிற்சியையும் முடித்ததும் "பல நாட்களாக நம் மனதில் கொண்டிருந்த ஏற்றுமதி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்தது. தற்போது நாமும் ஏற்றுமதி செய்யலாம்" என்ற நம்பிக்கையோ அல்லது "இந்த முயற்சி மூலம் கிடைத்த அறிவை பயன்படுத்தி ஏற்றுமதி/இறக்குமதி ஸ்தாபனங்களில் நன்கு பணி புரியலாம்" என்ற துணிவே உங்களுக்கு வந்து செயல்படத் தொடங்கினால், அதுவே எங்கள் பயிற்சி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். வாழ்த்துக்களுடன்,



அ. ஹுமாயூன்
டைரக்டர்