எங்களைப் பற்றி

தமிழ்நாடும், ஏற்றுமதியும்

தமிழ்நாடு இந்தியாவில் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் ஏற்றுமதியில் சுமார் 10 சதவீதம், அளவு தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஏற்றுமதி பொருட்கள்

 • சாப்ட்வேர் (மென்பொருள்)
 • கார்மெண்ட்ஸ்
 • டெக்ஸ்டைல்ஸ்
 • ஹோம் டெக்ஸ்டைல்ஸ்
 • டீ சர்ட்ஸ், சட்டைகள்
 • ஆட்டோமொபைல்ஸ்
 • கார்கள்
 • பழங்கள்
 • காய்கறிகள்
 • அரிசி
 • எண்ணெய்
 • தீப்பெட்டி
 • மஞ்சள்
 • காட்டன்
 • ரப்பர் மற்றும் ரப்பர் பொருட்கள்
 • பூக்கள்
 • ஸ்பைசஸ்
 • பனை பொருட்கள்
 • லெதர் மற்றும் லெதர் பொருட்கள
 • சில்க் சாரீஸ்

ஏற்றுமதி நகரங்கள்

 • சென்னை
 • கோயம்புத்தூர்
 • திருப்பூர்
 • ஈரோடு
 • சேலம்
 • மதுரை
 • தூத்துக்குடி
 • திருச்சி
 • ராஜபாளையம்
 • சிவகாசி
 • திருநெல்வேலி
 • கன்யாகுமரி
 • ஹோசூர்
 • தர்மபுரி
 • கிருஷ்ணகிரி
 • காரைக்குடி
 • ஸ்ரீவில்லிபுத்தூர்
 • வேலூர்
 • காஞ்சிபுரம்
 • ஆரணி
 • தர்மாவரம்

சேதுராமன் சாத்தப்பன் பற்றி

தினமலரில் "ஏற்றுமதி” சம்பந்தமாக 500 வாரங்களுக்கு மேல் தொடர் எழுதிக் கொண்டிருக்கிறார். தமிழ் தொழில் உலகம், தொழில் முன்னேற்றம் வர்த்தக மாதப் பத்திரிக்கைகளில் ஏற்றுமதிகேள்வி-பதில்கள் எழுதியும் மற்றும் மும்பை-மராத்திய முரசு நாளிதழில் "ஏற்றுமதி" பற்றி தொடர் எழுதியும் வாசகர்களின் அமோக வரவேற்பை பெற்ற திரு.சேதுராமன் சாத்தப்பன் அவர்களை வழிகாட்டியாகக் கொண்டு எங்களின்பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

இவர் ஏற்றுமதி ஆவணங்களுக்காக உலகஅளவில் நடத்தப்படும் தேர்வில் 1998ம் ஆண்டு கலந்து கொண்டு வெற்றி பெற்ற முதல் இந்திய வங்கியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் முதல் முறையாக எளிய தமிழில் "ஏற்றுமதி செய்வது எப்படி" என்ற பயிற்சியை மிக விரிவாக தபால் மூலம்நடத்தி வருகிறோம். தமிழ் மட்டும் தெரிந்தவர்களும் கூட ஏற்றுமதி செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை உண்டாக்கும்விதமாக தொடங்கப்பட்டது எங்கள் நிறுவனம். இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். அவர்களால் பாராட்டி எழுதப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு இந்த விளக்கவுரையில் கொடுத்துள்ளோம்.

திரு.சேதுராமன் சாத்தப்பன் அவர்கள், ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதிக்கான ஆவணங்களை பிழையில்லாமல்தயாரிப்பது எப்படி என்றும் அதற்கான விதிகளுக்கான (UCPDC) நடத்தப்படும் பல கருத்தரங்குகளில் / பயிற்சிமுகாம்களில் (இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும்) சிறப்பு பயிற்சி அளிப்பவர். தாங்கள் சொந்தமாக ஏற்றுமதி/இறக்குமதி செய்ய நினைத்தாலோ அல்லதுஏற்றுமதி/இறக்குமதி ஸ்தாபனங்களில்பணிபுரிய நினைத்தாலோ அதற்கு எங்கள் பயிற்சி தங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

எங்களைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள எங்கள் வலைப்பதிவை பாருங்கள்
sethuramansathappan.blogspot.in

பயிற்சி பாட திட்டங்கள்

பயிற்சி புத்தகங்கள்

ஏற்றுமதி பற்றி விரிவாக தெரிந்து கொள்வதற்காக அடிப்படையிலிருந்து ஆவணங்கள் (DOCUMENTS) தயாரிப்பவரைமிக விரிவாக 600 பக்கங்களுக்கு மேலாக பயிற்சி புத்தகங்கள் தயாரிக்கபட்டுள்ளன. மொத்தம் 11 புத்தகங்கள் உள்ளன. ஏற்றுமதி பற்றி அடிப்படியிலிருந்து, டாக்குமெண்டேஷன் வரை இதில் உங்களுக்கு விளக்கமாக தமிழில் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. இந்த தபால் வழிக் கல்வியின் முக்கிய நோக்கம் தவறில்லாத ஏற்றுமதி செய்வதாகும்..

பயிற்சி தேர்வுகள்

பயிற்சியின் போது பயறிசி பெறுபவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டார்கள் என அறிந்து கொள்ளும் பொருட்டுஎளிய வினாத்தாள் (Response Sheet) புத்தகத்தில் இணைக்கபட்டிருக்கும். நீங்கள் எழுதி அனுப்பியதும் பின்னர் அதைநாங்கள் திருப்பி மதிப்பெண் இட்டு அனுப்பி வைப்போம்.

பயிற்சி காலம்

3 மாதங்கள்

இறுதித் தேர்வு

பயிற்சி முடிந்தவுடன் இறுதித் தேர்வு தபால் வாயிலாக நடத்தப்படும். பின்னர் "சான்றிதழ்" வழங்கப்படும்.

பயிற்சி கட்டணம்

இந்த ஏற்றுமதி பயிற்சிக்கான கட்டணம் Rs 3000 ஆகும். இதை வங்கியில் ஆன்லைன் மூலமாகவும் அல்லது என்.ஈ.எப்.டி. (NEFT) மூலமாகவும் செலுத்தலாம். பணம் செலுத்தும் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

THE INSTITUTE FOR LEARNING EXPORTS
ACCOUNT NUMBER: 018010200006750
IFSC CODE: UTIB0000018
AXIS BANK BORIVILI WEST MUMBAI

நீங்கள் இந்த பணத்தை டி.டி மூலம் அனுப்ப விரும்பினால், வங்கி டி.டி "The Institute for Learning Exports” என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்கப்பட வேண்டும். அதை கீழ்கண்ட முகவரிக்கு கூரியரில் அனுப்பி வைக்கவும்.

The Institute for Learning Exports
54 A, Apollo Industrial Exports
Off Mahakali Caves Road
Andheri East,
Mumbai 400 093


நீங்கள் இந்த முழுப் பயிற்சியையும் முடித்ததும் "பல நாட்களாக நம் மனதில் கொண்டிருந்த ஏற்றுமதி சம்பந்தப்பட்டகேள்விகளுக்கு விடை கிடைத்தது. தற்போது நாமும் ஏற்றுமதி செய்யலாம்" என்ற நம்பிக்கையோஅல்லது "இந்த முயற்சிமூலம் கிடைத்த அறிவை பயன்படுத்தி ஏற்றுமதி/இறக்குமதி நிறுவனங்களில் நன்கு பணி புரியலாம்" என்றதுணிவே உங்களுக்கு வந்து செயல்படத் தொடங்கினால், அதுவே எங்கள் பயிற்சி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

பாராட்டுகிறார்கள்

எங்கள் நிறுவனத்தில் நூற்றுக்கானோர் சேர்ந்து படித்துள்ளார்கள். அவர்களில் சிலர் எழுதி அனுப்பிய பாராட்டுக் கடிதங்கள் இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
தொடர்புக்கு

Contact Info

The Institute for Learning Exports
54 A, Apollo Industrial Estate,
Off Mahakali Caves Road, Andheri (East)
Mumbai-400093.
09820338918.
022-25000774.
info@learningexports.com